அன்னைபூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும்.

150 0
தமிழீழப் போராட்டத்தில் எதிரியை அழிக்க ஆயுதம் ஏந்தி இரத்தம் சிந்தி உயிர்துறந்த போராளிகள் நடுவே கத்தியின்றி இரத்தம் இன்றி யுத்தம் நடத்திய போராளிகள் ஒருவர் திலீபன், அடுத்தவர் அன்னைபூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும். நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றலினை தாயக விடுதலைக்காக பல செயற்பாடுகளில் உறுதுணையாக பணியாற்றும் திரு ந விஜயகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகைச்சுடரினை கப்டன் மலைமதி / இந்திரா அவர்களின் சகோதரி திருமதி இரஞ்சிதமலர் பிரபாகரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். அகவணக்கத்தினை தொடர்ந்து திருவுருவப் படத்திற்கு மலர்மாலையினை தென்கிழக்குப் பிராந்தியத்தின் நீண்ட நாள் செயற்பாட்டாளர் திரு வி விஜயகாந் அவர்கள் அணிவித்தார்கள்.தொடர்ந்து மலர்வணக்கமும் சுடர்வணக்கமும் இடம்பெற்றது.
திருமதி விஜயலக்ஷ்மி திரவியராஜா அவர்கள் மற்றும் திருமதி சாந்தி ரஞ்சித்த அவர்களுடைய கவிதை இடம்பெற்றது. ஆசிரியை சாமினி கண்ணன் அவர்களின் மாணவிகளுடைய நடனத்தினை தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு நியூற்றன் அவர்களின் உரை மற்றும் தேசப்பணியாளர் திரு ஆறுமுகம் அவர்கள் அன்னை பூபதி அவர்களின் தியாக வரலாற்றோடு சமகால அரியல் கருத்துரையையும் வழங்கி இருந்தார். நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிவடிவில் ஒலிக்கப்பட்டு உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவுற்றது.