வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் – பேச்சு நடத்த சீன பிரதிநிதி தென் கொரியா பயணம்

304 0

வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த சீனாவின் உயர்மட்ட அணு திட்ட பிரதிநிதி தென் கொரியாவுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்க யுத்த கப்பல்கள் கொரிய குடா கடற்பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது.

இந்த நிலையில், அமெரிக்காவினால் சிரியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை தாக்குதல் மூலம் வடகொரியாவிற்கு எச்சரிக்கை ஒன்றினை அமெரிக்கா விடுவது போல தோன்றுவதாக, ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதன்மூலம் வட கொரியாவின் அணு ஆற்றலை மழுங்கடிக்க முடியும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடகொரிய ஸதாபக தலைவரின் 105ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரிய ஏவுகணை பரீட்சை ஒன்றை அந்நாடு மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிகழ்வுகளின்போது தமது இராணுவத்தின் பலத்தை வெளியுலகிற்கு வெளிப்படுத்தும் தன்மையை வட கொரியா கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.