கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காகத் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர் .
அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 160 மில்லி கிராம் 06 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றவரிடமிருந்து 08 கிராம் 830 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளைக் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.