நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை-இரா.சம்பந்தன்(காணொளி)

311 0

நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வவுனியா சின்ன அடம்பனில் நடைபெற்ற, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் அமைக்கப்பட்ட 150 வீடுகள் கையளிக்கும் நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நாட்டிற்குள் தமிழர்கள் சமமாகவும், ஒற்றுமையாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டுமென, இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும், இன்றும் அது நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியமர்வு, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.