அதிக வெப்பம் கண்ணுக்கு ஆபத்து- தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் முஹம்மட்

482 0

சமகாலத்தில் நிலவிவரும் அதிக சூரிய வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஐ.எல். மொஹமட் ரிபாஸ் தெரிவித்துள்ளார்.

சூரிய வெப்பம் அதிகமாக காணப்படும் காலப் பொழுதான, முற்பகல் 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது சிறந்தது எனவும் டாக்டர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவசியமான பயணங்களை மேற்கொள்பவர்கள் அதிக வெளிச்சத்தைத் தடுக்கும் கறுப்பு நிற மூக்குக் கண்ணாடிகளை பயன்படுத்துமாறும் டாக்டர் பொது மக்களைக் கேட்டுள்ளார்.

அத்துடன், வெப்பம் அதிகம் நிலவும் காலப் பகுதியில் அதிகமாக நீர் அருந்துவது நல்லது எனவும், வெளிப்பயணங்களின் பின்னர் வீடு வந்தவுடன் கண்களையும், முகத்தையும் நீரினால் கழுவிக் கொள்வது பாதுகாப்பானது எனவும் டாக்டர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.