வயதெல்லை அடைந்தாலும் ஊழியர் சேமலாப நிதியைப் பெற முடியாது

392 0

ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள பணத்தை மீளப் பெறுவதற்கு குறித்த வயதெல்லையை அடைந்திருந்த போதிலும், குறித்த நபர் வேறு தொழிலில் இணைந்திருந்தால், நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என ஊழியர் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் கீழ், ஒரு ஆண் ஊழியர் 55 வயது நிறைவடைந்த பின்னரும், ஒரு பெண் ஊழியர் 50 வயது நிறைவடைந்த பின்னரும் தமது முழுமையான நிதியை பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்கையில், ஊழியர் திணைக்கள அதிகாரிகள் தாம் நினைத்தவாறு சட்டங்களை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என அரச சேவை அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது