அவுஸ்திரேலியாவின் பொன்டி வணிகவளாகத்தில் சனிக்கிழமை கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் தந்தை தனது மகனின் செயலிற்காக கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் நான் பொலிஸ் உத்தியோகத்தராகயிருந்திருந்தால் நான் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கொன்றிருப்பேன் என ஜோல் கவுச்சியின் தந்தை அன்ரூ கவுச்சி தெரிவித்துள்ளார்.
தனது 40 வயது மகனின் செயலினை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனது மகன் செய்த செயலினால் ஏற்பட்ட வலிகளை வேதனைகளை போக்க கூடிய விதத்தில் என்னால் எதனையும் தெரிவிக்க முடியவில்லை தெரிவிக்க முடியாது என தந்தை தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு வேதனையான ஆன்மாவாக காணப்பட்டார் வேதனைப்பட்டார் விரக்தியடைந்தார் என தெரிவித்துள்ள அன்ரூ உங்கள் குழந்தைகளிற்கும் தேசத்திற்கும் அவர் செய்தமைக்காக வருந்துகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி வணிகவளாகத்தில் கத்திக்குத்தில் ஈடுபட்டவர் தனது மனோநிலை பாதிப்பை கையாள்வதற்கு உரிய உதவிகள் அனைத்தையும் வழங்கியதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
அவன் என் மகன் நான் ஆபத்தான ஒருவனை நேசித்தேன் உங்களிற்கு அவன் ஆபத்தானவன் எனக்கு அவன் ஒரு நோயாளி என அவர் தெரிவித்துள்ளார்.
அறிகுறி ஏதாவது தென்பட்டிருந்தால் நான் வேறு ஏதாவது செய்திருப்பேன் எனவும் கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
நான் முன்னர் ஒரு உணவுவிடுதிக்கு கொண்டுசென்றேன் அவர் என்னை முழுமையாக தழுவிக்கொண்டார் கடவுளே இது எனது மகன் என நான் தெரிவித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது மகன் 18 வருடங்களாக மருத்துவசிகிச்சை பெற்றுவந்தார் என கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
35 வயதுவரை அவர் வீட்டில் இருந்தார் அதன் பின்னர் பிரிஸ்பேர்ன் சென்றுவிட்டார் மருத்துவர்களிடம் செல்வதை கைவிட்டுவிட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் அவருக்கு பல நண்பர்கள் இருந்தனர் அவர் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் உதவினார்கள் எனவும் அவர் தாயார் தெரிவித்துள்ளார்.