இலங்கையில் கிரிக்கெட் துடுப்பின் வடிவில் அமைக்கப்படும் பிரமாண்ட சொகுசுக் கட்டடம்

279 0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களின் நலன்கருதி 69 மாடிகளைக் கொண்ட கிரிக்கெட் துடுப்பு வடிவிலான குடியிருப்பு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதனை அமைக்க 1996 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்கள் முன்வந்துள்ளனர்.

அந்தவகையில், ‘96 வெற்றி நாய­கர்கள் சதுக்கம்’ என்ற பெயரில் 69 மாடிகளை கொண்ட பாரிய குடியிருப்பு ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இவ்வாறு அமைக்கப்படும் கட்டடத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் 500,000 இலட்சம் ரூபா வருவாயினை அவர்களின் நலனுக்காக வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற தமக்கு முன்னர் இருந்த மூதாதையர்கள் காரணம் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு அவர்களின் நலனுக்காக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியானது கிரிக்கெட் பந்­து, கிரிக்கெட் துடுப்பு­களின் தோற்­றத்­தில் ­நிர்­மா­ணிக்­கப்­படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.