கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்ந்தது!

58 0

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள்  தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் கோழி  இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லையென மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னர் கோழி இறைச்சியின் விலையானது 1,100 ரூபாவாக காணப்பட்டதோடு தற்போது 1 கிலோ கோழி இறைச்சியின் விலையானது  1,500 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை,அதிகரித்துள்ள இறைச்சி மற்றும் முட்டையினது விலை எதிர்வரும் நாட்களில் குறைக்கப்படும் என   கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின்  தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தையடுத்து முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதுடன் மீண்டும் முட்டையின் விலை அதிகரித்தால் இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.