அம்பலாங்கொடை, பொல்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 7,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எல்பிட்டிய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அந்த வீட்டிலிருந்த பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் எதிர்வரும் 18ஆம் திகதி பலபிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.