குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் தீவிரப்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரிடம் அதிகளவு ஆற்றல் இருப்பதாகவும், தற்போது குறைந்தளவிலான ஆற்றல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
வீதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நேற்று (14) சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.