நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் – ஊடக செய்தி சரியானது என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

52 0

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் வன்முறைக்குள்ளானார் என வெளியான தகவல்கள் உண்மையானவை என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனி ஹிக்கின்ஸ் என்ற அவுஸ்திரேலிய நாடாளுமன்ற பணியாளர் புரூஸ் லெஹ்மன் என்ற பணியாளரால் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பில் ஊடகமொன்று  வெளியிட்ட செய்திக்காக புரூஸ்லெஹ்மன் அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார்.

எனினும் தனது செய்தி சரியானது என ஊடகநிறுவனம்  தெரிவித்துவந்தது.

இந்த நிலையில் ஊடகம்  தெரிவித்துள்ள விடயங்கள் சரியானவை என அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

புரூஸ்லெஹ்மன் பிரிட்டனி ஹிக்கின்சை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் வேண்டுமென்றே பொய்களை சொன்னார் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

28 வயது லெஹ்மன் அந்த பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது குறித்து மிகவும் உறுதியாக காணப்பட்டார் அந்த பெண்ணிற்கு அது குறித்து விருப்பம் உள்ளதா இல்லையா என்பதை அவர் கருத்தில் எடுக்கவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தான் நாடாளுமன்ற அலுவவகத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஹிக்கின்ஸ் மூன்று வருடங்களிற்கு முன்னர் தெரிவித்தவேளை அது அவுஸ்திரேலியாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் நாடாளுமன்றத்தின் கலாச்சாரம் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மறுஆய்வும் இடம்பெற்றது.