சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப்போவதில்லை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பறிக்கை

371 0

euஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளைக் கோரப்போவதில்லையென அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்ததாக வெளிவந்த செய்தியை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது.

இரு தரப்பினராலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமெனவும், ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான யோசனைக்கே தாம் ஆதரவு வழங்கியதாகவும் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிர்வாகி போல் கோட்பிரே, அதன்படி உள்நாட்டு விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படவேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தில், விசாரணைப் பொறிமுறை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக உன்னிப்பாக அவதானிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.