தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாதத்திற்கு துணை போகிறார்கள்

67 0

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.