வருடத்திற்கு 25000 பேர் மரணம் : வடக்கில் குறைக்கப்பட்ட முக்கிய உற்பத்தி!

422 0

வடக்கு மாகாணத்தில் அதிகளவு புகையிலை உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும், இவற்றினை குறைத்து வேறு உற்பத்தி பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் வருடம் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் புகைப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

புகையிலை உற்பத்தியாளர்களுக்கு வேறு உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தல் விடுத்துள்ளது.

அதற்கமைய திட்டங்களை வகுப்பதற்கு சுகாதார அமைச்சும், விவசாய அமைச்சும் ஒன்றிணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலேயே அதிகளவில் புகையிலை உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன.இவற்றை கருத்திற்கொண்டு, அவர்களுக்காக சோயா, மிளகு போன்ற உற்பத்தி பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.