சிறீலங்கா விமானசேவைக்குச் சொந்தமான 4 விமானங்களைக் குத்தகைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சிறீலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்போவதாக பாகிஸ்தான் விமான சேவை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமானசேவை நிறுவனத்தின் நிறைவேற்றி அதிகாரி தலைமையிலான குழுவினர் விரைவில் சிறீலங்கா அதிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக விமான சேவை நிறுவனத்தின் ஊடக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் சில விமானங்களை பாகிஸ்தானுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளதாக அமைச்சர் ஹபீர் காசிம் அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஏ-330 ரக விமானங்கள் நான்கை தமது பயன்பாட்டிற்கு பெற்றுக் கொள்கின்றமை குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி லண்டன் புறப்படும் விமான சேவைக்காக இந்த விமானங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் விமானசேவை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.