தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து கொள்ளும் போது தற்போது பரிசீலிக்கப்படும் உயர்தர சித்தியில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இலங்கை மருத்துவ சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பில் தற்போது பரிசீலிக்கப்படும் குறைந்தபட்ச தகுதியான உயிரியல் பாடத்திட்டத்தில் இரண்டு சிறப்பு சித்திகள் மற்றும் சாதாரண சித்தி பெற்று கொள்ளப்படுவதில் மாற்றம் இல்லை என மருத்துவ சபையின் பதிவாளர் மருத்துவர் டெரன்ஸ் காமினி சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச தரம் சம்பந்தமாக தற்போது மருத்துவ சபையின் மத்திய செயற்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்காலத்தில் பல்கலைக்கழக மருத்துவ பீட சபைக்கு அனுப்பவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.