அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதிருப்தி அடையும் வகையில் அமைந்துள்ளது!

237 0

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதிருப்தி அடையும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,இந்த அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் என்னை கடுமையாக அதிருப்தி அடையச் செய்துள்ளது.

உள்நாட்டு வர்த்தகர்கள் இருக்கும் போது அவர்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாது உள்நாட்டு கைத்தொழில்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.செவனகல, ஹிங்குரான சீனி உற்பத்திச்சாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது உள்நாட்டு முயற்சியான்மையாளர்களை பலவீனமடையச் செய்யும்.

கடந்த அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவில்லை. இந்த அரசாங்கமும் மஹிந்த ராஜபக்ஸவின் வழியைப் பின்பற்றுகின்றது.மஹிந்த ராஜபக்ஸவுடன் இருந்த சிலர் இந்த அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கின்றார்கள். அவ்வாறானவர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்ற முயற்சித்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் தமக்கு விருப்பமானவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குகின்றார்கள் என தயா கமகே தெரிவித்துள்ளார்.