பருத்தித்துறை – மந்திகையில் உள்ள ஆதார அரசினர் வைத்தியசாலையின் வைத்தியா்களும், தாதியர்களும் நோயாளர்களுடன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால் அவர்கள் உளவியல் ரீதியில் பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த வாரம் இவ்வைத்தியசாலைக்குச் சிகிச்சை மேற்கொள்வதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் அங்கு கடமையிலிருந்த வைத்தியரும்,தாதியரும் வயோதிபப் பெண் ஒருவருடன் மோசமாக நடந்து கொண்டமை பற்றி தெரிவித்தார்.
மிகவும் ஏலாத நிலையில் மிகுந்த வயிற்றுவலியினால் சுமார் 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிப அம்மா ஒருவர் கதறியபடி ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு ஓ.பி.டி (வெளிநோயாளா் பிாிவு) வாசலில் நின்ற தாதியர் ஒருவர் அவரைக் கண்டும் காணாதமாதிரி நின்று வேறு வேலை செய்வதுபோல் பாசாங்கு செய்துகொண்டிருந்தார்.
அந்த வயோதிப அம்மா மிகுந்த வேதனையுடன் காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து அந்தத் தாதியர் வயோதிப அம்மாவை ஓ.பி.டி மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு சென்றார்.
அவரும் மிகவும் வேதனையில் கதறியபடி மருத்துவரிடம் சென்றார் .
அங்கே இருந்த மருத்துவரிடம் வயோதிப அம்மாவைப் பார்த்து ”ஏன் நடிக்கின்றாய்? மருந்து போட்டால் மாறும் தானே என எரிச்சலாக சொல்கிறார். மிகவும் மனவேதனையுடன் அந்த வயோதிப அம்மா மருத்துதுண்டை மருத்துவரிடம் வாங்கிக் கொண்டு வெளியிலே வருகிறார்.
வயோதிப அம்மா ஏற்கனவே இந்த வைத்தியசாலையில் அனுமதித்து சத்திர சிகிச்சை செய்யப்பட்டு 12 நாளாக விடுதியில் தங்கி வைக்கப்பட்டிருந்தவராவர். என்றார் அந்தக் குடும்பஸ்தர்.
இந்த விடயத்தை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் கடவுளுக்கு அடுத்த படியாக வைத்தியர்களைத்தான் நம்புகிறார்கள். வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பினை (MBBS) கற்கும்போதே உளவியலும் கற்றுக்கொள்கிறார்கள் நோயாளர்களுடன் அன்பாக பேசுவதே அவர்களின் இயல்பாகும். அத்துடன் அமைதியும் சாந்தமும் அவர்களிடத்தே மேலோங்கியிருக்கும் அதுதான் வைத்தியர்களின் இயல்பாகும்.
வைத்தியசாலைக்கு சிகிச்சை மேற்கொள்ளச் சென்ற அந்த வயோதிபப் பெண் தனது உடல்நிலை மிகவும் மோசமான நிலையிலேயே இருந்துள்ளார். இதனை ஏன் அந்த வைத்தியர் உணர்ந்து கொள்ளவில்லை? நோயாளர்கள் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் மனரீதியல் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள் இதனை சாதாரன மக்களே புரிந்து வைத்திருப்பார்கள்.
அப்படியென்றால் வைத்தியரால் ஏன் புரிந்து கொள்ளாமல் போனது?வைத்தியர்கள் எப்பொழுதும் நோயாளர்களிடம் ஆறுதல் வார்த்தை கூறுபவராக இருக்கவேண்டும் ஆனால் இவ்வாறு கடிந்து கூறியவர் ஏன் மருந்தால் வயோதிபப் பெண்ணின் நோயை மாற்றவில்லை ஏன் அந்த வயோதிபப் பெண்ணின் நோயைக் குணப்படுத்த சந்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
ஒருபெண் தன் கணவனிற்கு அடுத்த படியாக சிகிச்சைக்காக வைத்தியரையே கடவுளாக நினைத்து தன் உடலினை காட்டுகின்றாள் இவ்வாறு புனிதமாக நினைக்கும் வைத்தியர்கள்
கடவுளாக இருப்பதையே மக்கள் எப்பொழுதும் விருப்புகிறார்கள். மாறாக ஒருசில வைத்தியர்கள் தம்மை காட்டுமிராண்டியாக காட்டிக்கொள்கிறார்கள்.
வைத்தியத்தொழிலை புனிதமாக செய்யும் வைத்தியர்கள் மத்தியில் ஒருசில வைத்தியர்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையால் அனைத்து வைத்தியர்களுக்கும் மோசமான பெயர் வாங்கிகொடுக்கிறார்கள். அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை எதிா்காலத்தில் கைவிடுவார்களா?