தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட மின் உபகரணம் ஒன்று நந்திக்கடல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மின் கட்டுப்படுத்தி உபகரணத்தினை விடுதலைப் புலிகளின் இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவினர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.மேலும் இந்த மின் கட்டுப்படுத்தி உபகரணத்தை விடுதலைப் புலிகள் தொலைத்தொடர்பு கருவிகளை இயக்குவதற்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
12 வோல்ட் (VOLTS) (DC) நேரோட்ட மின்சாரத்தை குறித்த மின்கட்டுப்படுத்தியை பயன்படுத்தி 9 வோல்ட் நேரோட்ட மின்சாரமாக, துள்ளியமாக குறைக்கும் திறன் கொண்டதாக இந்த மின்கட்டுப்படுத்தி காணப்படுகின்றது.2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது குறித்த மின்கட்டுப்படுத்தி உபகரணத்தை விடுதலைப் புலிகள் கைவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளினால் கைவிடப்பட்டு, தற்போது மீட்கப்பட்ட இந்த மின் உபகரணம் 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இயங்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.