சிவனொளி பாத மலையாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு பாவனைக்கு உதவாத பானங்களை விற்பனைச் செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த தினம் நல்லத்தண்ணி நகர் மற்றும் நல்லத்தண்ணி சிவனொளி பாதையில் அமைந்துள்ள 38 வர்த்தக நிலையங்கள், பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது பாவனைக்கு உதவாத தொதல் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் அழிக்கப்பட்டதாகவும் நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பரிசோதகர் காமினி பெரேரா தெரிவித்தார்.