வவுனியா பூந்தோட்டம் முகாமில் வசித்த 150 குடும்பங்களிற்காக தனியாரால் சின்னடம்பன் பகுதியில் கட்டப்பட்ட வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வில் இன்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொள்கின்றார்.
வவுனியா மாவட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள சின்னடம்பன் கிராமத்தில் லைக்கா நிறுவனத்தினால் குறித்த 150 வீடுகளும் அமைக்கப்பட்டது. குறித்த வீடுகள் இன்றைய தினம் கையளிக்கப்படவிருந்த நிலையில் இந் நிகழ்விற்காக இந்தியத் திரைப்பட நடிகர் சுப்பஸ்ரார் ரஜனிக்காந் அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு ரஜனியின் வருகை அறிவிக்கப்பட்டதும் அரசியல் ரீதியில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதனையடுத்து ரஜனி தனது வருகையை இரத்து செய்திருந்தார். அது நல்லூர் வளாக ஆர்ப்பாட்டம் என இட்டுச் சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டுத் திட்டம் இன்றைய தினம் அதன் உரிமையாளர்களிடம் அந் நிறுவனத்தினால் கையளிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்விலேயே கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.