யாழ். மாநகரசபையின் கட்டிடத்தினில் குடியிருக்கும் புலனாய்வாளர்களை அகன்று அப்பகுதியினை சபையிடம் ஒப்படைக்குமாறு ஆணையாளர் பொலிசாருக்கு எழுத்தில் கோரியுள்ளார்.
யாழ். மாநகரசபையின் சங்கிலியன் வீதி சந்தியில் உள்ள நூலகம் மற்றும் சிறுவர் முன்பள்ளி ஆகிய கட்டிடங்களின் அருகே மாநகரசபையின் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று இயங்கியது. அவ்வாறு இயங்கிய சுகாதார நிலையத்தினை அங்கிருந்து அகற்றி மாநகரசபையின் பணத்தில் வாடகைக்கட்டிடத்தில் இயங்குகின்றது. ஆனால் மாநகரசபைக்குச் சொந்தமான கட்டிடத்தினை சபை இயங்கிய காலத்தில் மாநகர முதல்வரால் பொலிசாரின் புலனாய்வாளர்களிற்கு குறித்த கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வழங்கிய கட்டிடத்தில் 10ற்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் தங்கியுள்ளபோதும் இன்றுவரை எந்தவிதமான வாடகைப்பணமும் மாநகரசபைக்கு செலுத்துவதும் கிடையாது. இதனால் சபையின் சுகாதார நிலையத்திற்கு இடமின்றி பல இடங்களிற்கும் கொண்டு செல்லப்படுவதோடு சபையின் பணமும் விரயமாகின்றது.
இதனால் சபையின் கட்டிடத்தினை பயன் படுத்தும் பொலிஸ் புலனாய்வாளர்கள் குறித்த கட்டிடத்தினை மீள ஒப்படைக்க வேண்டும். எனக்கோரி ஆணையாளர் பொ.வாகீசன் பொலிசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு அனுப்பிய கடிதத்திற்கு தற்போது பொலிசார் தங்குவதற்கு உடனடியாக பொருத்தமான இடம் இன்மையால் மேலும் 6 மாத காலம் கால அவகாசம் வழங்குமாறு மாநகர சபைக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.