நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் பிரசண்டா

411 0

201607251143149944_Nepal-KP-Oli-steps-down-Prachanda-set-to-be-new-PM_SECVPFகே.பி.ஒலி ராஜினாமாவை தொடர்ந்து பிரசண்டா மீண்டும் நேபாளத்தின் புதிய பிரதமராகிறார்.நேபாள பிரதமராக கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். கூட்டணி கட்சிகள் நேபாளி காங்கிரஸ் மற்றும் பிரசண்டா தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்டு கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன.பூகம்பத்தால் பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பு செய்யவில்லை. விலைவாசி உயர்வு, கள்ளச்சந்தையை கட்டுப்படுத்தவில்லை உள்ளிட்ட பல பிரச்சினைகளை காரணம் காட்டின. மெஜாரிட்டி இழந்ததால் பாராளுமன்றத்தில் அவரது பலத்தை நிரூபிக்க ஜனாதிபதி பிந்தியாதேவி பண்டாரி உத்தரவிட்டார்.

அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அதற்கு முன்னதாக கே.பி.ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி பிந்தியாதேவி பண்டாரி ஏற்றுக் கொண்டார்.

புதிய அரசு பதவி ஏற்கும் வரை காபந்து அரசாக தொடரும்படி கே.பி.ஒலியை கேட்டுக் கொண்டார். மேலும் 7 நாட்களுக்குள் புதிய அரசு அமைக்கும்படி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேபாளி காங்கிரஸ், மாதேஸ்கட்சிகள் பிரசண்டா தலைமையிலான மத்திய மாவோயிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் செய்தன.

அதன்படி முதல் 9 மாதங்களுக்கு பிரசண்டா பிரதமர் பதவி வகிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர்பகதூர் துபேயிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்பட உள்ளது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து பிரசண்டா நேபாளத்தின் 39-வது பிரதமர் ஆகிறார்.

அவர் விரைவில் புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே 2008-ம் ஆண்டு பிரசண்டா பிரதமர் ஆக இருந்தார். ஒருங்கிணைந்த மாவோயிஸ்டு கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தபோது அவர் அப்பதவி வகித்தார். ஆனால் அவரால் 1½ ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவியில் நீடிக்க முடிந்தது.