மத்தியமாநிலத்தில் ஆண்டு 12ஐ நிறைவு செய்த 80 மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

1699 0

 யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறைவு விழாவில் . மத்தியமாநிலத்தில் ஆண்டு 12ஐ நிறைவு செய்த 80 மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
6.4.2024அன்று யேர்மனி மத்தியமாநிலத்தில் நடைபெற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை றிறைவு விழாவில் யேர்மனி மத்தியமாநிலத்தின் தமிழாலயங்களில் ஆண்டு பன்னிரெண்டை நிறைவு செய்த 80 மாணவர்கள்  கலைமாணி யமுனாராணி தியாபரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர். இவர் கொற்றிங்கன் தமிழாலயத்தின் நீண்டகால ஆசிரியரும், தமிழ்க் கல்விக் கழகத்தினால் தமிழ்வாருதி எனும் சிறப்புப் பட்டத்தினை பெற்றவரும், வட மாநிலத்தின் கல்விக் குழுச் செயற்பாட்டாளரும், அனைத்துலக கல்வி மேம்பாட்டுப் பேரவையின் புதிய நூலாக்கக் குழுவின் பணியாளருமாவார்.