கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்பட்ட போதிலும், புதிதாக எதுவும் மேம்படுத்தப்படவில்லை

242 0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்பட்ட போதிலும், புதிதாக எதுவும் மேம்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூன்று மாத அட்டவனைக்கமைய புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தினால் மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மிகப்பெரிய விமானமான A380 விமானத்தை தரையிறக்குவதற்கு சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு ஏற்றுக் கொண்டதற்கமைய ஓடுபாதைகள் புனரமைக்கப்படவில்லை.

50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்டது. பொதுவாக 52 மீற்றருக்கு மேற்பட்ட அளவிலா விமான இறக்கை கொண்ட விமானங்கள் தரையிறங்குவதற்கு 65 மீற்றருக்கும் அதிக அளவிலான இடவசதி அவசியமாகும்.

A380 விமானத்தின் இறக்கை 80 மீற்றர் அகலம் கொண்டது. எனினும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையின் அகலம் புனரமைப்பின் பின்னரும் 45 மீற்றரிலேயே காணப்படுகின்றது. புனரமைப்பு நடவடிக்கைகளின் போது இதன் அகலம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் (இலங்கை) தரமுயர்த்தப்பட்ட விமான நிலைய ஓடுபாதை குறித்து குற்றம் சுமத்தியுள்ளனர்.

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு குறிப்பிட்டதற்கமைய இந்த விமான நிலைய புனரமைப்பு ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படவில்லை.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பின் பின்னர் A380 விமானத்தை அங்கு தரையிறக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அமைச்சு மீண்டும் மீண்டும் கூறி வந்தது.

குறித்த விமானம் தரையிறக்குவதற்கு F என்ற குறியீட்டை கொண்ட 60 மீற்றர் அகலத்தை கொண்ட விமான ஓடுபாதை புனரமைக்கப்பட்டிருக்க வேண்டும். 45 மீற்றர் அகலத்தை கொண்ட விமான ஓடுபாதைகள் அந்த அளவு பாரத்தை தாங்கக்கூடியவைகள் அல்ல.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புனரமைப்பின் பின்னர் 45 மீற்றர் அளவில் காணப்படுகின்ற நிலையில் தோல்பட்டை அளவு 15 மீற்றரில் காணப்படுகின்றது. முழுமையான ஒடுபாதையின் அளவு 75 மீற்றரை அகலத்தை கொண்டுள்ளது. அது F என்ற குறியீட்டிற்கு பொருத்தமானதல்ல.

எப்படியிருப்பினும் புனரமைப்பின் பின்னரும் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை E குறியீட்டிலான அளவிலேயே காணப்படுகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.