பொலிஸாரின் மற்றொரு விசேட நடவடிக்கை!

51 0

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பணம் செலுத்தும் முறைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்காக பொலிஸார் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய நேற்று (06) முதல் 10 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை அமுலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று கையடக்கத் தொலைபேசி மூலம் பணம் செலுத்தும் முறைகளை பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 198 பேர் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டன.

அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய 18 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வங்கி கணக்கு பதிவுகள் மற்றும் 71 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான தொலைபேசி கோபுர பகுப்பாய்வு அறிக்கைகள் ஊடாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.