இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக ரிஷி சுனக் இருந்து வருகிறார். இந்திய வம்சாவளியான இவர் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர்.இந்நிலையில், இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்துப் பேசியுள்ளார்.
. அத்துடன் வலை பயிற்சியிலும் ஈடுபட்டார். ஆண்டர்சன் பந்து வீச ரிஷி சுனக் பேட்டிங் செய்துள்ளார். மேலும், தன்னை பந்துவீசி போல்டாக்கிய நபரை அழைத்துப் பாராட்டும் தெரிவித்தார் ரிஷி சுனக்.இதுதொடர்பான வீடியோவை பிரதமர் ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.