அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சென்னை மாவட்ட பாராளுமன்றத் தொகுதிக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக வி.எஸ்.பாபு நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும், இவருக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணிகளை ஆற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.