இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா நிவாரணங்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்திய அரசாங்கம், ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு எட்டு தண்ணீர் தாங்கி வாகனங்களையும் 100 மெற்றிக்தொன் அரிசி போன்ற உணவுப்பொருட்களையும் உரிய பிரிவுகளுக்கு கையளித்துள்ளது
இந்த பொருட்கள் விரைவில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
அயலில் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா எப்போதும் இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு உதவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 40 வருடக்காலப்பகுதியில் இலங்கை தற்போது கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுஸ்மா சுட்டிக்காட்டியுள்ளார்.