முல்லேரியா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களாவர்.
இவர்கள் முல்லேரியா பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு அருகில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்துவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகளவிலான பாடசாலை மாணவர்கள் இந்த சிகை அலங்கார நிலையத்திலிருந்து போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.