பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

56 0

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகலரத்நாயக்க ஜேக் சலிவன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறைமைக்கான அமெரிக்காவின் ஆதரவு சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்களை பூர்த்தி செய்தல் எதிர்கால ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்து இலங்கையுடன் அமெரிக்கா ஆராய்ந்தது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பதற்காக இலங்கையுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டை பேணுவது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தனது ஆர்வத்தை வெளியிட்டுள்ளார்.