தம்புள்ளை பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை 10 வருடங்களின் பின்னர் குறைவடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது .
தினசரி காய்கறிகளின் வருகை அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகப் வியாபாரிகள் தெரிவித்தனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ,
ஒரு கிலோ போஞ்சி 40 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலும், கோவா மற்றும் வெண்டக்காய் கிலோ 100 ரூபாவாகவும், கரட் 200 ரூபாவாகவும், வெள்ளரிக்காய் 15 ரூபாவாகவும் குறைந்துள்ளது.