ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் பிரகாரம் நேற்று (05) 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, காலி, ராகமை, மொரட்டுவை, பண்டாரகம மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 09 சந்தேகபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் புகுடு கண்ணா, பொடி லெஸ்ஸி, கணேமுல்ல சஞ்சீவ, ஹினடிய சங்க, குடு அஞ்சு, குடு சலிந்து மற்றும் மத்துகம கவரியா ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.