மட்டக்களப்பு – மகிழூரில் வியாபார சந்தை திறப்பு

74 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மகிழூர் கிராமத்தில் மாபெரும் வியாபார சந்தை வெள்ளிக்கிழமை (05) மாலை மகிழூர் விளையாட்டு மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மகிழூர் மேற்கு மற்றும் எருவில் தெற்கு, எருவில் கிழக்கு ஆகிய பகுதிகளில் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுவினர் இணைந்து முன்னெடுத்திருந்த இந்த வியாபார சந்தை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார்.

அப்பகுதியிலுள்ள சுய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், அவர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான களமாகவும் இச்சந்தை காணப்படுகிறது.

அந்த வகையில், சமூக, பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மேலும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி சிவப்பிரியா வில்வரத்னம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சா.அறிவழகன், அம்கோர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முரளிதரன், லிவ்ற் நிறுவன பணிப்பாளர் யாணு முரளிதரன், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.