டெங்கு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பும் குறைந்தன!

88 0

இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாகச் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 64 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், தற்போது  இரண்டு வலயங்களாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார் .

ஜனவரி முதல் இதுவரை 20,365 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர. அவர்களில் 7,289 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர் .

2024ஆம் ஆண்டு டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக மாத்திரமே பதிவாகியுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது .