சீமான் 2-ம் கட்ட பிரச்சாரம் ஏப்.10-ல் ஈரோட்டில் நிறைவு

66 0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 2-ம் கட்ட பிரச்சாரம் கடந்த 3-ம் தேதி தென் சென்னை தொகுதியில் தொடங்கியது. பின்னர், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மொத்தம் 16 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்டப் பிரச்சாரம் வரும் 10-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.