சென்னை, நெல்லை, ஈரோடு பகுதிகளில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

52 0

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.இந்நிலையில் இன்று சென்னை, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், அபிராமபுரத்தில் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் தங்கவேலு வீடுகளில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

நெல்லை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.ஈரோட்டில் சத்தியமூர்த்தி என்பவரது கட்டுமான நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.”,