உக்ரைன் யுத்தம் – ஒரேதாக்குதலில் ரஸ்யாவின் ஆறு போர் விமானங்களை அழித்ததாக உக்ரைன் தகவல்

58 0

ரஸ்யாவின் தென்பகுதி விமானதளம் மீது உக்ரைன் மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமானதாக்குதலில் ரஸ்யாவின் ஆறு போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 8 விமானங்கள் சேதமடைந்துள்ளன 20க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் போர்முனையில் பயன்படுத்தப்படும் எஸ்யு27- 34 விமானங்களின் மொரெஜொவ்ஸ்க் தளத்தின் மீதே இஸ்ரேல் ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஸ்யா இதுவரை இந்த தாக்குதல் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனினும் உக்ரைனின் 40 ஆளில்லா விமானங்கள் இலக்குவைக்கப்பட்டன  என தெரிவித்துள்ளது.

உக்ரைன் 40க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதால் ரஸ்யாவின் வான்வெளி பாதுகாப்பு பொறிமுறை செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்  என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.