எகிப்தில் மூன்று மாதகால அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி (Abdul Fattah al-Sisi) நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தண்டா (Tanta) மற்றும் எலக்ஸ்சான்ரியா (Alexandria) நகரங்களில் இரண்டு தேவாலயங்கள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் 44 பேர் பலியாகினர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ள, ஜனாதிபதி, இந்த காலப்பகுதியில், மறைந்துள்ள தீவிரவாதிகளை தேடி அழிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.