இங்கிலாந்து அரசுக்கு இந்திய தூதரகம் ரூ.45 கோடி கடன் பாக்கி

465 0

201607251037492914_Boris-Johnson-claims-India-owes-UK-multi-million-pounds_SECVPFஇங்கிலாந்து அரசுக்கு இந்திய தூதரகம் ரூ.45 கோடி கடன்பாக்கி வைத்துள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் மந்திரி தெரிவித்தார்.ஐரோப்பிய யூனியன் விவகாரத்தில் டேவிட் கேமரூன் பதவி விலகியதை தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசாமே பதவி ஏற்றுள்ளார். இவரது தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பாராளுமன்றம் கூடியது.

அப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நிறுவனங்கள் இங்கிலாந்துக்கு செலுத்த வேண்டிய நீண்ட பாக்கி தொகை பட்டியலை அவையில் வெளியிட்டார். அதில் இந்திய தூதரக அதிகாரிகளும் கடன்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

அந்த வகையில் இந்திய தூதரக அதிகாரிகள் இங்கிலாந்து அரசுக்கு ரூ.45 கோடி கடன் பாக்கி வைத்துள்ளனர். லண்டன் போக்குவரத்து நிறுவனத்தில் பயன்படுத்திய வாகனங்களுக்கு பணம் செலுத்தாமல் நிலுவை தொகை வைத்துள்ளனர்.

கடந்த 2003-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த தொகை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தியா தவிர ஜப்பான், நைஜீரியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் தலா ரூ.10 கோடி பாக்கி வைத்துள்ளன. மொத்தத்தில் பல நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் ரூ.970 கோடி பாக்கி வைத்திருப்பதாகவும் அறிவித்தார்.