நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பணியில் ஆன்மீக தலைவர்கள் முன்னிலை வகிக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தங்கொட்டுவ சிங்கக்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக ஈடுபடுபவர்கள் ஆன்மீக தலைவர்களே.
சமய மூல நூல்களில், நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளன.
இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, ஆன்மீக தலைவர்களுக்கு உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.