பண்டிகைக்காலத்தில் அதிக கட்டண அறிவீடு – முறையிட முடியும்

251 0

பண்டிகை காலங்களில் பயணிகளிடம் அதிக கட்டணங்களை அறிவிடும் பேரூந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் 3 மாதங்களுக்கு தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து அதிகளவான முறைபாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.ஜே.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அதிக கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பாக 1955 என்ற இலக்கத்திற்கு முறையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் தொடர்பில் 0117555555 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிட முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிரிவர்தன தெரிவித்துள்ளார்.