சென்னை விமான நிலையத்தில் 65-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து

494 0

201607251046218457_Chennai-airport-is-the-65th-time-breaking-glass-Female_SECVPFசென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கதவு, மேற்கூரை, தடுப்பு கண்ணாடி ஆகியவை அடிக்கடி உடைந்து விழும் சம்பவம் நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்லும் பயணிகளை பன்னாட்டு விமான நிலையத்துக்குள் புறப்பாடு பகுதியில் உள்ள 17-வது வாசல் வழியாக போலீசார் அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் படையை சேர்ந்த பெண் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 17-வது நுழைவு வாசலில் இருந்த 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட தானியங்கி கண்ணாடி கதவு திடீர் என பயங்கரமாக உடைந்து விழுந்தது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசுக்கு காயம் ஏற்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.

உடனே சிகிச்சைக்காக பெண் போலீசை மருத்துவமனையில் சேர்த்தனர். விமான நிலைய ஊழியர்கள் உடைந்த கண்ணாடியை எடுத்து விட்டு புதிய தானியங்கி கதவை அங்கு பொருத்தினர். 65 முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தானியங்கி கண்ணாடி எவ்வாறு உடைந்தது என்றும் விசாரித்து வருகிறார்கள். மேலும் விமான நிலையத்தில் உள்ள எல்லா கண்ணாடிகளையும் பரிசோதித்து வருகிறார்கள்.