வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் ஜி.சுகுணன் கடமையினை பொறுப்பேற்றார்.
அண்மையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் பல்வேறு புதிய நியமனங்களை சுகாதார அமைச்சு முன்னெடுத்திருந்தது.
அந்தவகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
முன்னதாக வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
இவர் முன்னர்மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.