பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 24 பேர் கடந்த வருடம் உயிரிழப்பு!

46 0

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது 24 பேர் கடந்த  வருடம் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கடந்த வருடம் ஆணைக்குழுவுக்கு  9,714 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.