இதுவரை 252 பேர் கைது

50 0

20விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் செயல்களை செய்த மேலும் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு ஆதரவளித்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கனேமுல்ல பிரதேசத்தில் மேல்மாகாண வடக்கு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்தொலுகம பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 37 வயதுடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு – பொலவலன பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், ஹொரம்பெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா, கிரிந்திவிட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், களுத்துறை குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் பாணந்துறை பொலிஸ் பிரிவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 45 வயது மற்றும் 71 வயதுடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி முதல் நேற்று (02) வரையான தேடுதல் நடவடிக்கைகளின் போது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.