புத்தளம், வணாத்தவில்லு ,காட்டுப்புளியங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக வணாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்தனர்.
வணாத்தவில்லுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபருக்கும் சந்தேக நபருக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடுமையாக தாக்கப்பட்ட இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்டார் என சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்துள்ளதாக வணாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்தனர்.