வவுனியாவில் தனியார் பஸ்ஸினை வழிமறித்து தாக்குதல் முயற்சி

60 0

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் (02) மதியம் தனியார் பஸ்ஸினை வழிமறித்து மற்றொரு  தனியார் பஸ் சாரதி, நடத்துனர்  குறித்த பஸ் நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

செட்டிக்குளம் வீரபுரம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸினை பாவற்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் வழி மறித்து செட்டிக்குளம் தனியார் பஸ்ஸின் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டமையுடன் அவருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

நேரசூசி பிரச்சினை காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.