தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வருவதை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தால், அநுரகுமாரவின் வருகை தொடர்பான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளின் மதில்களில், வாசல்களில் ஒட்டப்பட்டுள்ளன.
இவ்வாறான சுவரொட்டிகள் பாடசாலை மதில்களில் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.